Stree Dharmam - Woman Well-being | ஸ்த்ரீ தர்மம் - பெண்கள் நலம்

Stree Dharmam - Woman Well-being | ஸ்த்ரீ தர்மம் - பெண்கள் நலம்

Om Sri Kodi Baba Aalayam, Madipakkam
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயணத்துடன் நடைபெறும் ஸ்த்ரீ தர்ம வழிபாடானது, பெண்கள் தங்கள் சுய தர்மத்தை காப்பதற்கும், குழந்தைகள் மற்றும் குடும்ப சுபிக்ஷத்திற்கும் மற்றும் லோக ஷேமத்திற்கும் வழிவகுக்கிறது.

"ஸ்த்ரீ மூலம் ஸர்வ தர்மா" - எல்லா தர்மங்களுக்கும் பெண்களே ஆணிவேர் - ஸநாதன தர்மம்

ஸ்த்ரீகள் தங்கள் தர்மத்தில் நிலை பெற்றிருந்தால், புருஷர்களும் தர்மத்தில் நிலைபெற்று, லோகமே தர்மத்தில் நிலைபெற்றுவிடும். - ஸ்ரீ மஹா பெரியவா, (பெண்மை, ப- 57)

ஸ்த்ரீ தர்மம் என்றால் ஸ்த்ரீகளுக்கான வாழ்க்கை முறை என்று குறுகிய அர்த்தம் கொள்ளப்படுகிறது. மேலும் இது ஸ்த்ரீகளுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் கொள்ளப்படுகிறது. மஹான்களின் அருள்வாக்கிற்கிணங்க, ஸ்த்ரீ தர்மம் என்பது ஸ்த்ரீ / புருஷர் இருபாலர்களிடமும் உள்ள ஸ்த்ரீத்வத்தை / மாத்ருத்வத்தை போற்றுவதாகவும், சிவசக்தி ஐக்கியத்தின் தாத்பர்யமாகவும் அமைந்துள்ளது. தர்மத்தின்படி வாழ்வதற்குரிய வாழ்க்கை நெறிமுறைகளை, அவர்கள் சுய விருப்பத்துடன் சுவீகரித்துக் கொள்வதாக அமைந்துள்ளது.

"வேதோ (அ) கிலோ தர்ம மூலம்"

என்ற மநு சொல்கிற படி வேதந்தான் நாம் என்னென்ன செய்யவேண்டும் என்ற நெறிகளுக்கும் காரியங்களுக்கும் மூலமாக, வேராக, ஊற்றாக இருக்கிறது.

ஆத்ம க்ஷேமத்துக்காக நாம் என்ன செய்ய வேண்டுமோ அதிலேயே லோக க்ஷேமத்தையும் பயனாக ஏற்படுத்தித் தருவது வேதம். இந்த இரண்டும் ஏற்பட எது உதவுகிறதோ அதுதான் தர்மம் என்பது.

"சரீரம் ஆத்யம் கலு தர்மஸாதனம்''

இந்த உடலானது தர்ம (அறநெறி) அநுஷ்டானத்துக்குச் சாதனமாக இருக்கிறது. தர்மாநுஷ்டானம் ஆன்ம மேன்மையை அளிக்கிறது. ஹோமத்திற்கு (வேள்வித் தீயிலிடுவதற்கு)த் தர்ப்பைப் புல், சமித், நெய், அரிசி முதலிய இவ்வளவு சாதனங்களைப் போல உடலும் ஒரு சாதனம். அதுவே பிரதானமான சாதனம். வேள்வித் தீயிலிடுவதற்காக உமியை எப்படிக் காத்து வைத்திருக்கிறோமோ அதே போல இந்த உடலையும் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.

நமது கோடி பாபா ஆலயத்தில், பெண்களின் தேக ஷேமத்திற்காக, Speciality மருத்துவ முகாம்கள் (Woman Wellness medical camps) தொடர்ந்து நடத்தப் படுகின்றன. சிவசக்தி ஐக்கிய நிலைக்கு மனம் ஒன்றுபடுதல் அவசியமாவதால், பாபாவின் பேரருளாணைப்படி, தர்ம தீப பூஜை, ஞான தீப பூஜை என்று கால நேரங்களுக்கேற்ப வழிபாடு அனுசரிக்கப் படுகின்றன.

தர்ம கவசம் மற்றும் ஆத்ம பலத்திற்காகவும், விஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயணத்துடன் நடைபெறும் ஸ்த்ரீ தர்ம வழிபாடானது, பெண்கள் தங்கள் சுய தர்மத்தை காப்பதற்கும், குழந்தைகள் மற்றும் குடும்ப சுபிக்ஷத்திற்கும் மற்றும் லோக ஷேமத்திற்கும் வழிவகுக்கிறது.

ஸ்ரீ கோடி பாபா ஆலயத்தில் அமாவசை, பௌர்ணமி, ஏகாதசி ஆகிய நாட்களிலும், நவராத்திரி மற்றும் உலக மகளிர் தினத்தின் போதும் அனுசரிக்கப் படுகின்றன. இந்த பூஜையில் பெண்கள் (பத்து வயதிற்கு மேல்) கலந்து கொள்ளலாம்.

இந்த வழிபாட்டில் கலந்து கொள்ள விரும்புகிறவர்கள் டிரஸ்ட் அலுவலகத்தை அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள SGK Care : +91 9444383014 தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.


தர்ம கவசம் மற்றும் ஆத்ம பலத்திற்காகவும், ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயணத்துடன் நடைபெறும் ஸ்த்ரீ தர்ம வழிபாடானது, பெண்கள் தங்கள் சுய தர்மத்தை காப்பதற்கும், குழந்தைகள் மற்றும் குடும்ப சுபிக்ஷத்திற்கும் மற்றும் லோக ஷேமத்திற்கும் வழிவகுக்கிறது.



Report Page