Stree Moolam Sarva Dharma

Stree Moolam Sarva Dharma

OM SHRI SAI GURU KODI CHARITABLE TRUST, MADIPAKKAM

“எல்லா தர்மங்களுக்கும் பெண்களே ஆணிவேர்” - சனாதன தர்மம்.

“ஸ்திரீகள் தங்கள் தர்மத்தில் நிலை பெற்றிருந்தால், புருஷர்களும் தர்மத்தில் நிலைபெற்று, லோகமே தர்மத்தில் நிலைபெற்றுவிடும்.” - ஸ்ரீ மஹா பெரியவா. (பெண்மை பக்கம் எண் 57 )

கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என்பதாக மேல் மட்டத்தில் மட்டும் தெரியும் இஹ லோக ஜீவனத்தில் ஸெளக்யமாகத் தெரிகிறவற்றுக்காகவே ஸ்வதர்மம் தப்பி வேற வழியில் போவது. அப்படியே போய்க்கொண்டிருந்தால் பல தினுஸிலும் விபரீதம் நேரும்.

ஒவ்வொரு இனத்துக்கும் ஒவ்வொரு ஒழுங்குப்பாட்டு முறையிலான ஸ்வதர்மம் என்று ஸ்ருஷ்டியில் இருக்கிறது. இதில் மேல்மட்டத்தில் பார்த்து, உசத்தி, தாழ்த்தி பேதங்களைச் கல்பித்துக்கொண்டு, ஒருவிதமான ஸ்வதர்மம் படைத்தவர்கள் ஸம உரிமைப் போராட்டம் என்ற பெயரில், வேறுவிதமான ஸ்வதர்மத்துக்குப் பாயப் பார்த்தால், ஆரம்பத்தில் ஸரியாகப் போகிற மாதிரியே இருந்தாலும் போகப் போகத் தனி ஜீவர்களின் வாழ்க்கை, குடும்ப வாழ்க்கை, மொத்தமான பெரிய ஜன ஸமுதாய வாழ்க்கை எல்லாம் கெட்டுப் போகும்.

இஹம், பரம் இரண்டுக்குமான நிலைத்த ஸெளக்யம் கிடைக்காமல், ஏதோ ஒரு இடைக்காலத்தில் ஏதோ சில லாபங்கள் கிடைத்த மாதிரித் தோன்றுவதோடு முடிந்து போகும். சின்னதான தாற்காலிக நிறைவுக்காக நிஜமான நித்யமான நிறைவைக் கோட்டை விட்டதாக முடிந்து போகும். - ஸ்ரீ மஹா பெரியவா

The Vedas refer to the mother first – “Maatru Devo Bhava” – and only then refer to the father – “Pitru Devo Bhava. 

வேதங்கள் முதலில் தாயை "மாத்ரு தேவோ பவ" பின் "பித்ரு தேவோ பவ" என்றும் குறிப்பிடுகின்றன.

ஸநாதன தர்ம முறைப்படி ஸ்த்ரீகளுக்கு அளித்துள்ள அவ்வளவு பெருமை புருஷனுக்கு இல்லை என்று கூட சொல்லலாம். குடும்பத் தேரின் இரு சக்கரங்கள் புருஷனும் மனைவியும். கிருஹஸ்த தர்மங்களைச் செய்வதில் ஸ்த்ரீகளுக்குத் தான் அதிக முக்யத்துவம். எந்த வீட்டில் ஸ்த்ரீகள் போற்றப்படுகின்றனரோ அங்கு தேவதைகள் சந்தோஷப்படுகின்றனர். ‘க்ருஹம்’ என்ற பெயர் வீட்டிற்கு ஏற்பட்டதே க்ருஹலக்ஷ்மீயாகவும் க்ருஹதேவதையாகவும் உள்ள ‘க்ருஹிணீ’யினால் தான் என்று கூறக்காண்கிறோம். ஸ்த்ரீயானவள் தன்னுடைய இயற்கையாய் அமைந்த இந்த ஸ்த்ரீத்வத்தை இரக்ஷித்து கொள்ள வேண்டும்.




Report Page