Skanda Jyoti Seva - ஸ்கந்த ஜோதி சேவா | स्कन्द ज्योति सेवा
OM SRI KODI BABA AALAYAM | www.saigurukodi.org
ஸ்கந்த ஜோதி சேவா தை பூசம், கந்த சஷ்டி திருவிழா மற்றும் பிரதி மாதம் கிருத்திகை நட்சத்திரம், சஷ்டி திதியன்றும் மற்றும் அறிவிக்கப்பட்ட விசேஷ தினங்களில் நடைபெறும்.
இந்தப் பூஜை நமது குடும்ப வாழ்வு நலம்பெற செய்யப்படுவதால், சுமங்கலிகள், கன்னிப் பெண்கள், குழந்தைகள் மற்றும் ஆண்கள் கலந்து கொள்ளலாம்.
ஸ்ரீ ஸ்கந்த சஷ்டி கவச பாராயணத்தோடு செய்யப்படும் ஸ்கந்த ஜோதி பூஜை செய்பவர் பெறும் பலன்கள்.
- பெண்களின் ஆயுள் மற்றும் ஆரோக்கியம், சுமங்கலித்துவம் நீடிக்கும்.
- எதிரிகள், பிணிகள் மூலம் வரும் தடைகள் நீங்குதல்.
- குழந்தைகளின் கல்வி, நன்னடத்தை சிறப்புறுதல்.
- விவேகமும், ஞானமும் மேம்படுதல்.
குறிப்பு : பூஜையில் கலந்து கொள்வதற்கு முன்னர் தாய், தந்தையர் வீட்டில் இருந்தால் அவர்களை நமஸ்கரித்த பின்னரே, ஆலயம் வந்து பூஜையில் கலந்து கொள்ள வேண்டும். தாய் தந்தையர் அருகில் இல்லாதவர்கள், பூஜையை ஆரம்பிக்கும் முன்னர், அவர்களை மானசீகமாக நமஸ்கரித்த பின்னரே பூஜையை ஆரம்பிக்க வேண்டும்.
இந்த வழிபாட்டில் கலந்து கொள்ள விரும்புகிறவர்கள் டிரஸ்ட் அலுவலகத்தை அல்லது SGK Care : +91 9444383014 தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.
ஸ்கந்த ஜோதி சேவா: ₹ 400 (அன்னதானத்திற்காக)
Donate - Make A Difference : https://www.saigurukodi.org/donations.php
ஸ்கந்த ஜோதி அனுஷ்டானம் (வழிபாட்டு முறை)
ஸ்ரீ ஸ்கந்த சஷ்டி கவச பாராயணம் (Click here to listen or download)
முருகனின் அழகும் அருளும்
மநஸிஜ கோடி கோடி லாவண்யாய:
‘மநஸிஜ கோடி கோடி’ – கோடி கோடி மன்மதர்கள்.
கோடியைக் கோடியால் பெருக்கினால் எவ்வளவு பெரிசு? அதுதான் ‘கோடி கோடி’.
ஸுப்ரஹ்மண்யர் கோடி கோடி மன்மத லாவண்யராக இருப்பதுதான் ஆச்சர்யம்.
இவர் யார்?
பரமேச்வரனின் புத்ரர். அந்தப் பரமேச்வரனோ மன்மதனை அப்படியே பஸ்மம் பண்ணினவர். எந்த நேத்ராக்னியினாலே அவர் மன்மதனைப் பொசுக்கினாரோ அதே நேத்ராக்னியிலிருந்து உண்டானவர் ஸுப்ரஹ்மண்யர். காமத்திலே பிறக்காமல் ஞானத்திலே பிறந்தவர். ஞானமே லோகத்தை ரக்ஷிக்க வேண்டும் என்று கருணாமூர்த்தியாக ஆன ஸ்வரூபம் என்று தத்வார்த்தம்.




Donate - Make A Difference : https://www.saigurukodi.org/donations.php
Also visit -
www.saigurukodi.org | www.kodidharma.org | www.feedingbharat.org
for more information