SkandaJyoti Anushtanam

SkandaJyoti Anushtanam

OM SRI KODI BABA AALAYAM | www.saigurukodi.org

ஸ்கந்த ஜோதி அனுஷ்டானம் (வழிபாட்டு முறை)

ஸ்கந்த ஜோதி சேவா (Click the link)

ஸ்ரீ ஸ்கந்த சஷ்டி கவச பாராயணம் (Click here to listen or download)

  1. பூஜைக்குரிய பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  • பஞ்சமுக விளக்கு (சந்தனம், குங்குமம், பூ வைத்தது)
  • தாம்பாளத் தட்டு
  • திரி
  • நெய்
  • தீப்பெட்டி
  • விபூதி
  • குங்குமம்

2. பூஜையில் சுமங்கலிகள், கன்னிப் பெண்கள், குழந்தைகள் மற்றும் ஆண்கள் கலந்து கொள்ளலாம். பூஜையை கிழக்கு, மேற்கு அல்லது வடக்கு முகமாக மனையிலோ அல்லது விரிப்பிலோ அமர்ந்து செய்ய வேண்டும்.

3. கீழே அமர்ந்தபின் வலது தொடையின் மேல் இடது கையை மேல் நோக்கி வைத்து, வலது கையை அதன் மேல் மூடுவது போல் வைத்துக் கொள்ளவும். கண்களை மூடிக் கொண்டு, ஸ்ரீ விநாயகப் பெருமானை மனத்தில் துதித்து, பின் சங்கல்பத்தை மூன்று முறை சொல்லி தீபத்தை ஏற்றி பூஜையை ஆரம்பிக்கவும்.

சங்கல்பம்: (3 முறை சொல்லவும்)

குருர் ப்ரஹ்மா குருர் விஷ்ணு:

குருர் தேவோ மஹேச்வர: |

குருஸ் ஸாக்ஷாத் பரப்ரஹ்ம

தஸ்மை ஸ்ரீகுரவே நம: ||

4. முதலில் திருவிளக்கு போற்றி (108) பாராயணம் செய்து கொண்டே தீபத்தை, பராசக்தி தேவியாக பாவித்து, குங்குமத்தை மட்டும் தீபத்திற்கு அர்ச்சனை செய்ய வேண்டும்.

5. பின் ஸ்ரீ ஸ்கந்த சஷ்டி கவசத்தை ஸ்ரத்தையுடன் பாராயணம் செய்து கொண்டே விபூதியை ஸ்கந்தனாக பாவித்து சமர்ப்பிக்க வேண்டும்.

7. ஸ்ரீ ஸ்கந்த சஷ்டி கவசத்தை மூன்று முறை ஸ்ரத்தையுடன் பாராயணம் செய்து முடித்தபின்னர், தீபத்தை நமஸ்கரித்து, பூஜையை நிறைவு செய்ய வேண்டும்.

8. பூஜை முடிந்த பின்னர் விபூதி, குங்குமத்தை தனியே எடுத்து வைக்கவும்.

9. பூஜைக்குப் பயன்படுத்திய விபூதி, குங்குமத்தை தினமும் குளிப்பதற்கு முன்னர், உடம்பில் நாபிக்கு (தொப்புள்) மேல் தேய்த்து பின் குளிக்கவும்.




Report Page