Rain Prayer - மழை த்யானம் | #SaveWater | World Water Day - March 22nd
Om Sri Kodi Baba Aalayam, Madipakkam

நீரின்றி அமையாது உலகு - திருவள்ளுவர்
பண்டைய காலத்தில் மனிதன் இயற்கையோடு இயைந்து வாழ்ந்து கொண்டிருந்தான். அதனால் எந்த பிரச்சனையும் இல்லாமல் இருந்தது. பின் இயற்கை வாழ்வில் இருந்து விலகி, இயற்கை வளங்களை அளவிற்கு அதிகமாக உபயோகப்படுத்தி மாசுபடுத்தும் போதுதான் இயற்கை பேரிடர்களும், சீற்றங்களும் அதிகரித்துள்ளது.
இதனை கருத்தில் கொண்டே ஐ.நா நிறுவனம், 22 மார்ச் அன்று உலக நீர் தினமாக கொண்டாடுகிறது. நீர், இயற்கை மற்றும் பருவநிலை நெருக்கடி ஆகியவற்றை மனதில் கொண்டு, ‘நீரைப் போற்றுதல்’ (Valuing Water) என்கிற கருத்தை வலியுறுத்துகிறது.
"தண்ணீரை பூமிக்குள் தேடுவது ஆபத்து. அதை வானத்தில் இருந்து வரவழைக்க செய்". - நம்மாழ்வார்
நமது முன்னோர்கள் நீரை வானத்தில் இருந்து வரவழைக்கவும், நீர் நிலைகளை பாதுகாக்கவும், நீர் வளங்களை அதிகரிக்கவும் பல திட்டங்களையும், யுக்திகளைக் கையாண்டார்கள்.
இயற்கையுடனான தொடர்பை நாம் திரும்பவும் அதிகரித்துக் கொள்வதற்காக, "ஸாயீகுருகோடி தர்மா" பிரத்யேகமாக சில சேவைகளைச் செய்துகொண்டிருக்கிறது.
- மழை த்யானம் – விஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயணத்துடன்
- நர நாராயண சேவா (மழைக்காக பிரார்த்தனை)
- #Savewater campaign (நீரை சேமித்தல்) இன்றளவும், இந்த #Savewater campaign, டிரஸ்டின் FeedingBharat (food distribution) புரோக்ராம் மூலமாக பட்டிதொட்டிக்கெல்லாம் சென்றடைய முயற்சி செய்துவருகிறது.
சென்னையில் தண்ணீரின் தட்டுப்பாடு நாம் அனைவரும் நன்கு அறிந்ததே. அதனால் நாம் அனைவரும் ஒன்றிணைந்து மழைக்கான பிரார்த்தனைகளை ஆத்மார்த்தமாக தொடருவோமாக !
English Version
When water fails, functions of nature cease - Thiruvalluvar
Until recently man lived in symbiotic relationship with nature. So there were no problems of natural resources.
Later when we drifted away from nature; over-utilised it; failed to maintain water resources, natural disasters and calamities taking severe toll on us.
"It is dangerous to search for water in the Earth. Make it come down from Sky." - Nammaalvar
Our ancestors devised many plans, strategies and implemented time tested methods to fetch water from the sky, preserve water bodies and thereby increase water resources.
In order to co-exist us with Nature, "SaiGuruKodi Dharma" has been doing some services exclusively. They are
+ Rain Meditation - Recitation of Sri Vishnu Sahasranama (for timely rains )
+ Nara Narayana Seva (Praying for Rain)
+ #Savewater campaign, To this day, SGK has been taking this campaign to nook and corner through its' FeedingBharat (food distribution) program.
We are well aware of the water shortage in Chennai. So let us whole heartedly continue to pray for rain together !
#SaveWater, Prayer for Rain & Thanks giving from Farmer to Baba (Complete Food Chain) - A glimpse






#SaveWater #EndFoodWaste Awareness campaigns @ last mile of #FeedingBharat Prog




Rain Dhyan (மழை த்யானம்) at Kodi Baba Aalayam


Donate - Make A Difference : https://www.dharmabharat.org/donate
Also visit -
www.dharmabharat.org | www.kodidharma.org | www.feedingbharat.org
for more information
Ver 1.0 - 22-3-2021
Ver 2.0 - 31-12-2023