Koththamalli Itly - M SRI Editz

Koththamalli Itly - M SRI Editz

M SRI Editz

Click here to join ☛ M SRI Useful Tips Tamil - Telegram Channel & Group

கொத்தமல்லி இட்லி

https://www.youtube.com/c/MSRIEditz


கொத்தமல்லி இட்லி

கொத்தமல்லி இட்லி என்றாலே அதன் மணமும் சுவையும் எல்லோரையும் அதிகமாகவே சாப்பிட வைக்கும். இது செய்வது மிக எளிமையானதும் கூட.


☛ தேவையான பொருட்கள் ☟


இட்லி மாவு - 2 கப்,

ம‌ல்லித்தழை - ஒரு கட்டு,

கறிவேப்பிலை சிறிதளவு,

தேங்காய் துருவல் ஒரு டீஸ்பூன்,

பச்சை மிளகாய் - 4,

புளி சிறிய உருண்டை,

உப்பு தேவையான அளவு,

எண்ணெய் - 2 தே‌க்கர‌ண்டி.,

கடுகு - அரை தே‌க்கர‌ண்டி,

உளுத்தம்பருப்பு - 2 தே‌க்கர‌ண்டி,

எண்ணெய் - 2 தே‌க்கர‌ண்டி.


☛ செய்முறை ☟


இட்லி மாவைக் கொண்டு இட்லிகளாக ஊற்றி எடுத்துக்கொள்ளுங்கள்.


மல்லித்தழை, கறிவேப்பிலையை சுத்தம் செய்யுங்கள்.


எண்ணெயைக் காயவைத்து தேங்காய், மிளகாய், புளி, கொத்துமல்லி, கறிவேப்பிலை சேர்த்து வதக்கி நன்கு அரைத்தெடுங்கள்.


எண்ணெயைக் காயவைத்து தாளிக்கும் பொருட்களைப் போட்டு, அதை வறுத்து அரைத்த விழுதுடன் சேர்த்து சற்று தளதளவென்று கரைத்துக்கொள்ளுங்கள்.


அதனுடன் இட்லிகளை சேர்த்து நன்கு கலந்து பரிமாறுங்கள்.

Report Page