Break Covid
Smart Manojஈரோடு வாழ் மக்களுக்கு ஒரு *எச்சரிக்கை பதிவு*
😷இன்றைய ஆக்சிஜன் படுக்கை வசதி பற்றிய தற்போதைய நிலவரம் நாம் அறிந்ததே.
😷தொண்டை வலி, சளி, காய்ச்சல், இருமல் உள்ளிட்ட ஆரம்ப அறிகுறி வந்தவுடனே முதல் நாளே தனியார் லேப் அல்லது அரசு கோவிட் டெஸ்ட் சென்டருக்கு சென்று கோவிட் டெஸ்ட் எடுத்துக் கொள்ளுங்கள்
😷 ரிஸல்ட் நெகட்டிவ் வந்தால் மகிழ்ச்சி.
*பாஸிட்டிவ் வந்தால்*
"வீட்டிலேயே தனியாக இருக்கிறேன்" என்று இருந்து மற்றவருக்கும் தொற்றை பரப்ப வேண்டாம்
உடனே ஈரோடு பேருந்து நிலையம் அருகில் உள்ள நகராட்சி திருமண மண்டபத்திற்கு சென்றால் அங்கு மருந்து கொடுக்கிறார்கள்.
பாதிக்கப்பட்டவரை
அரசு ஏற்பாட்டில் உள்ள
வேளாளர் பொறியியல் கல்லூரி மற்றும்
கொங்கு கல்லூரி யில் உள்ள தனிமைப்படுத்தும் வார்டுக்கு
(COVID ISOLATION CENTER) அனுப்பி வைக்கிறார்கள்.
அங்கு நல்ல வசதியுடன் நிறைய படுக்கைகள் காலியாக உள்ளன
😷அங்கே நன்றாக கவனித்துக் கொள்கிறார்கள். குணம் அடைந்தவுடன் மீண்டும் ஒருமுறை டெஸ்ட் எடுத்து
நெகட்டிவ் வந்தவுடன் தான் வீட்டிற்கு அனுப்புகிறார்கள்
இதுதான் சரியான வழி.
அரசின் வழிகாட்டு நெறிமுறை.
😷இதை தவிர்த்து நாட்களைக் கடத்தினால் பணமும் செலவாகும், சொத்து கரையும், ஆம்புலன்ஸ்,
ஆக்சிஜன் படுக்கை முதல் ஆத்மா வரை உயிருக்கு போராட வரிசையில் நிற்க வேண்டி வரும்.
அரசுக்கு ஒத்துழைப்போம்,
பெருந்தொற்றை
வென்றேடுப்போம்.
💪🏼💪🏼💪🏼💪🏼💪🏼💪🏼