Annadaan Benefits - அன்னதானத்தின் பலன்கள்
OM SHRI SAI GURU KODI CHARITABLE TRUST, MADIPAKKAMஅரிசி, பருப்பு, தானியங்கள் மற்றும் மளிகை சாமான்கள்
வேதங்களில் தானியங்கள் குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் வாய்ந்தவை எனக் கூறபட்டிருக்கிறது. பூமியில் விளைந்த தானியங்கள் அனைத்தும் சிவபெருமானுக்கு இஷ்டமானவை என முனிவர்கள் கூறியுள்ளனர்.
சமைப்பதற்கு முன், தானியங்களுக்குள் இருக்கும் உயிர் சக்தி செயலற்றதாக இருக்கிறது, ஆனால் நாம் அவற்றை சமைக்கும் போது, உயிர் சக்தி விழித்தெழுந்து, அவற்றைச் சுற்றியுள்ள நுட்பமான ஆற்றல்களை (நல்ல மற்றும் எதிர்மறையான) தன்னகத்தே எடுத்துக்கொள்ளும். அதனால்தான், சமைக்கப்படாத தானியங்கள் மட்டுமே கோயில்களுக்குத் தானமாக வழங்கப்படுகின்றன. கோயில்களில் நன்கொடையாக பெறப்பட்ட தானியங்கள் அக்னிக்குப் படைத்துவிட்டப்பின் பிரசாதமாக வழங்கப்படுவதால், அதன் தோஷங்கள் நீங்கி புனிதமடைகின்றன.
அன்னதான மளிகை சாமான்கள் : ₹ 3000 (multiples of ₹1000)
எண்ணெய் / நெய்
அன்னதானத்திற்காகப் பயன்படுத்தப்படும் எண்ணெய் மற்றும் நெய் தானமாக வழங்குபவர்கள் நல்ல ஆரோக்கியத்தைப் பெறுவர்.
அன்னதான மளிகை சாமான்கள் - எண்ணெய் / நெய் : ₹ 1000 (multiples of ₹1000)
பால் / தயிர்
அன்னதானத்திற்காகப் பயன்படுத்தப்படும் பால் மற்றும் தயிர் தானமாக வழங்குபவர்கள் தங்கள் துன்பங்கள் நீங்கப்பெறுவர். அவர்களது வம்சம் விருத்தியாகும்.
அன்னதானத்திற்குறிய பால் / தயிர் சேவைக்கு : ₹ 1000 (multiples of ₹ 500)
காய்கறிகள்
அன்னதானத்திற்காகப் பயன்படுத்தப்படும் காய்கறிகளை தானமாக
வழங்குபவர்களின் குழந்தைகளின் ஆரோக்கியம் மேம்படும்.
அன்னதானத்திற்குறிய காய்கறிகள் சேவைக்கு : ₹ 2000 (multiples of ₹1000)
குடிநீர் - (Also see ஜல தானம்)
அன்னதானத்திற்காகப் பயன்படுத்தப்படும் குடிநீரைத் தானமாக வழங்குபவர்கள், மூதாதையர்களின் கடன் நீங்கப்பெற்று அவர்களது ஆசிகளைப் பெறுவர்.
அன்ன அக்னி சேவா
அக்னியின் மூலம் சமைக்கப்படும் உணவு புனிதமடைகிறது. உணவு விளைவித்த முறையினாலும், அதை வீட்டிற்குள் கொண்டு வந்து சேர்க்கும் முறையினாலும் ஏற்படும் அனைத்து தோக்ஷங்களும் அகற்றப்படுகிறது. நாம் சமைத்த உணவை ஜடராக்னிக்கு (நமது வயிற்றில் உருவாகும் அக்னி, நாம் சாப்பிடும் உணவைச் செரித்து அன்னமய கோசத்தை உருவாக்குகிறது) படைத்தல், இறைவனுக்குப் படைத்ததற்கு சமமாகும்.
பக்தர்கள் நன்கொடையாக வழங்கும் கேஸ் சிலிண்டர், அன்னதானப்
பிரசாதம் செய்வதற்கு பயன்படுத்தப் படுவதால், அன்னதான சேவையின் சிறப்புகள் அனைத்தும் இந்தச் சேவைக்கும் பொருந்தும்.