தயிர் அன்னப்பிரசாத சேவா - Curd Rice Seva
Om Shri Kodi Baba Aalayam"ஒரு ஜீவனுக்கு பசியினால் ஏற்படும் துன்பத்தைப் போக்குவதில் ஏற்படும் இன்பம் தான் மேலான இன்பம்" - வள்ளலார்
பசி ஒரு பிணியாகும். அன்னம் உயிர் நாடிக்கு அத்தியாவசியம். பசியோடு இருக்கும் ஒருவருக்கு எந்த பிரதிபலனும் எதிர்பாராமல் அன்னம் அளிப்பது, அவரது அன்னமய கோசத்திற்கு (உணவால் ஆன உடல்) உயிர் கொடுத்ததற்கு சமமாகும்.
பாபா தம் பக்தர்களின் பசியாற்றவே, அன்னத்தைத் தன் பிரசாதமாக தினமும் வழங்குகிறார். மேலும் தயிர் நமது உடலுக்கு குளிர்ச்சியையும், மனதிற்கு சாந்தத்தையும், திருப்தியையும் அளிக்கிறது.
இதனை விஞ்ஞானிகள், தயிரில் 'டிரிப்டோபன் (Tryptophan)' என்னும் அமினோ அமிலம், தயிர் அன்னத்தை உண்பவர்களுக்கு செரோடோனின் என்ற ஒரு நியூரோ-கெமிக்கலைச் சுரக்கச் செய்து, அவர்களது மனநிலையைச் சீராக்கி, திருப்தியை அளிக்கிறது என்பதை ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ளார்கள்.
பாபா தான் வாழ்ந்த காலத்தில், தினந்தோறும் பிரசாதமாக மோர் மற்றும் லஸ்ஸி வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பாபாவின் ஆலயத்தில் நடைபெறும் இத்தகைய சிறப்புமிக்க
தயிர் அன்னப்பிரசாத சேவை : ₹ 1000/-
* Make A Difference
தானமும் தர்மமும் நமது கர்ம வினைகளை அகற்றி, சித்த சுத்தி, ஆத்ம சுத்தி அளிக்கிறது. வீடு பேற்றுக்கு வழிவகுக்கிறது. நமது வாழ்வில் அனுதினமும் கடைபிடிக்க வேண்டிய தர்மங்களைப் பற்றி அறிந்து கொள்ள :
Do Dharma Daily - தினம் ஒரு தர்மம்
(Click for more information)