TON

TON

செய்திப்பிழை @seithi

டான்:

கருத்து சுகந்திரத்தை தர உருவாக்கப்பட்ட டெலெக்ராம் எனும் சமூக ஊடகம் இந்த ஆண்டு இறுதியிலோ அல்லது அடுத்த ஆண்டின் தொடக்கத்திலோ டான் எனும் மறைகுறியீட்டு பணத்தை வெளியிட உள்ளது. இது பிட்காயின் போன்றவைகள் போல் முதலீட்டாளர்களுக்காக உருவாக்கப்படவில்லை மாறாக வர்த்தக சுகந்திரத்தை உறுதிப்படுத்த மேற்கொள்ளப்படும் ஓர் புதிய முயற்சி. இது சட்டத்திற்கு புறம்பானதா, வரி ஏய்ப்பு செய்யுமா மற்றும் குவாண்டம் கணினியின் தாக்குதலை சமாளிக்கும் அளவிற்கு பாதுகாப்பானதா என ஆராய்வது ஒருபுறம் இருக்க இவ்வகை பரிவர்த்தனைகள் எதிர்காலத்தில் தவிர்க்க முடியாதது என்பதால் இதை பற்றி தெரிந்துகொள்வது நல்லது. இந்தியா உட்பட ஒவ்வொரு நாடும் இதுபோன்ற பாளைத்தொடர் (BlockChain) தொழில்நுட்பத்திற்கு மாற முயற்சிக்கிறது.


டெலெக்ராமின் விநியோகிக்கப்பட்ட தரவு சேமிப்பக நிபுணத்துவத்தால், டான் எனும் ஒரு வேகமான மற்றும் வெவ்வேறு அளவில் பிரிந்து சேரக்கூடிய உள்ளார்ந்த பன்முக பாளத்தொடர் கட்டமைப்பு உருவாக்கப்படவுள்ளது. டன் ஒரு நடுவனில்லா பரவலாக்கப்பட்ட மேம்மையான கணினி மற்றும் மதிப்பு பரிமாற்ற அமைப்பு என கருதப்படுகிறது. அதிகபட்ச பாதுகாப்புடன் குறைந்தபட்ச பரிவர்த்தனை நேரத்தில் இணைப்பதன் மூலம், புதிய நடுவனில்லா பொருளாதாரத்திற்கான விசா/மாஸ்டெர்க்கார்டிற்கு மாற்றாக டான் இருக்க முடியும்.

அசல் பங்களிப்பு, அகழ் வெகுமதி மற்றும் பணவீக்கம்:

இதில் மொத்தமாக 5 கிகா கிராமங்களை பங்களிக்க (அதாவது, 5 பில்லியன் கிராம்கள் அல்லது 5x10 ^ 18 நானோக்கள்) வரையறுக்கப்படுகின்றன. புதிய பிரதானபாளைத்தொடர் மற்றும் ஊடுபாளைத்தொடர் அகழ்வுக்கும் பரிசோதிப்பவர்க்கு வழங்கப்படும் வெகுமதிகளால், இந்த பாக்களிப்பு மிகவும் மெதுவாக அதிகரிக்கும். பரிசோதிப்பவர் விடாமுயற்சியுடன் தனது கடமைகளை அதாவது தடையின்றியும் பிழையின்றியும் குறியிட்டு செயல்படுத்தினால் வருடத்திற்கு பரிசோதிப்பவரின் வெகுமதி பரிசோதிப்பவர்களின் பங்கில் சுமார் 20%மாக இருக்கும் (சரியான அளவு எதிர்காலத்தில் சரிசெய்யப்படலாம்). இவ்வழியில், பரிசோதிப்பவர்களின் லாபம் பயனர்களின் பரிவர்த்தனைகளின் அதிகரித்துவரும் அளவைச் செயலாக்கத் தேவையான சிறந்த மற்றும் விரைவான வன்பொருளில் முதலீடு செய்ய போதுமானதாக இருக்கும். எந்த நேரத்திலும் பரிசோதிப்பவர்களின் சராசரிபங்கு மொத்த விநியோகத்தில் சுமார் 10%மாக கட்டுப்படுத்தப்படும். இது ஆண்டுக்கு 2% பணவீக்க வீதத்தை உருவாக்கும், இதன் விளைவாக, 35 ஆண்டுகளில் கிராமங்கள் (பத்து கிகாகிராம்) மொத்தமாக இரட்டிப்பாக்கும். முக்கியமாக, இந்த பணவீக்கம் சமூகத்தின் அனைத்து உறுப்பினர்களாலும் இவ்அமைப்புமுறையை பராமரிப்பதற்கும் செயல்படுவதற்கும் பரிசோதிப்பவர்களுக்கு செலுத்தப்படும் கட்டணமாகும். மறுபுறம், ஒரு பரிசோதிப்பவர் தவறாக செயல்பட்டால், ஒரு குறிப்பிட்ட பங்குகள் அல்லது அவரின் அனைத்து பங்குகளும் தண்டனையாக எடுத்துக் கொள்ளப்படும், மேலும் அதன் பெரும்பகுதி "எரிக்கப்படும்". இதனால் இவ்வமைப்பிலுள்ள மொத்த கிராம்கள் குறைத்து பணவாட்டத்திற்கு வழிவகுக்கும். அபராதத்தில் ஒரு சிறிய பகுதி பரிசோதிப்பவர்களுக்கு அல்லது குற்றவாளியை கண்டறிய தூண்டிலிட்டோருக்கு மறுவிநியோகம் செய்யப்படும்.


கிராமின் அசல் விலை:

முதல் கிராம் சுமார் $0.1 (ரூ7)க்கு என்ற விலைக்கு விற்கப்படும். ஒவ்வொரு அடுத்தடுத்த கிராமும் (டான் அறக்கட்டளையால் டன் ரிசர்வ் மூலமாக விற்கப்படும்) முந்தைய கிராமை விட 1/100,00,000 கிராம் அதிகமான விலைக்கு விற்கப்படும். இந்த வழியில், புழக்கத்தில் உள்ள nவது கிராம் தோராயமாக p(n)≈$ [0.1x(1+10^-9)^n] என்று விற்கப்படும்.

கிராமின் சந்தை விலை.

நிச்சயமாக, சுகந்திர வெளிச்சந்தையில் n-கிராம் புழக்கத்திற்கு வந்தபிறகு கிராமின் விலை p(n)≈0.1x(1+10^-9)^nக்கும் கீழே சென்றால் யாரும் டன் ரிசர்வ்விலிருந்து புதிய கிராம்களை வாங்கமாட்டார்கள் மாறாக சுகந்திர வெளிச்சந்தையில் வாங்குவார்கள்; இதனால் மொத்த கிராம்களின் அளவு அதிகரிப்பதில்லை. மறுபுறம், கிராம் சந்தை விலை p(n)ஐ விட அதிகமானதாக இருந்தால் டன் ரிசர்வ்விலிருந்து புதிய கிராம்கள் வாங்கப்படும். இதனால், கிராமங்களின் சந்தை விலை திடீர் ஏற்ற தாழ்விற்க்கு உள்ளாகாது மேலும் மதிப்பீட்டாளர்களின் வைப்பு பங்குகள் குறைந்தது ஒரு மாதத்திற்கு முடக்கி வைக்கப்படுவதால் வளியின் விலை மிக வேகமாக மாறாது. எனவே, அமைப்பின் ஒட்டுமொத்த பொருளாதார நிலைத்தன்மைக்கும் கிராம் பரிமாற்ற வீதத்தில் ஏற்படும் திடீர் ஏற்ற தாழ்வை தவிர்க்கவும் மேற்குறிய வழிமுறை செயலாற்றும்.


கிராம்களை மீண்டும் வாங்குதல்.

மொத்தமாக n கிராம்கள் சுழற்சியில் இருக்கும்போது கிராமின் சந்தை விலை (p(n))/2 கீழே விழுந்தால் (அதாவது டான் ரிசர்வ் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு சிறப்பு கணக்கில் இல்லாத), டான் ரிசர்வ் சில கிராம்களை வாங்க உரிமை உள்ளது இதனால் கிராம்கள் திரும்பப்பெறப்பட்டு புழக்கத்தின் மொத்த அளவு குறையும். கிராமின் விலை மாற்று விகிதத்தின் திடீர் வீழ்ச்சியை தடுக்க இது தேவைப்படலாம்.


அதிக விலையில் புதிய கிராம்கள் விற்பனை செய்யப்படுத்தல்.

டான் ரிசர்வ் விலை நிர்ணயம் p(n)≈0.1x(1+10^-9)^n படி கிராமின் மொத்த விநியோகத்தில் பாதி மட்டுமே (அதாவது 2.5 கிகாகிராம்) விற்க முடியும். மீதமுள்ள கிராமங்களில் ஏதேனும் விற்பனை செய்யவோ அல்லது p(n)ஐ விட அதிக விலையில் விற்கவோ உரிமை இல்லை, ஆனால் எந்த தருணத்திலும் குறைந்த விலையில் (விரைவாக மாறிவரும் பரிமாற்று விகிதங்களின் நிச்சயமற்ற தன்மையை கணக்கில் எடுத்துக்கொண்டால்) விற்கப்படாது. இங்கே உள்ள நியாயம் என்னவென்றால், எல்லா கிராமங்களிலும் குறைந்தது ஒரு முறை விற்பனை செய்யப்பட்டு விட்டால், கிராம் சந்தையின் மொத்த தேவைக்கு போதுமானதாக இருக்கும், மேலும் ஆரம்பத்தில் விரிவுறுத்தும் போது வெளிப்புற சக்திகளால் உண்டாகும் விலை ஏற்ற தாழ்வு செய்வதற்கரியதாய் இருபத்தை உறுதிசெய்யும்.

செய்திப்பிழை @seithi

Report Page