Law

Law

Anonymous

#இலங்கையில்_சட்டத்தரணியாவது_எப்படி ?

சட்ட தொழிலில் வாண்மை (Professional) பெறுதல் உங்களை வெற்றியின் உச்சத்துக்கு கொண்டுசெல்லும் என்பதில் ஐயமில்லை. தொழில் தெரிவில் இதனை கவனத்திலெடுப்பது உங்கள் வாழ்க்கையை மாற்றலாம். சட்டம் தொடர்பான பதிவுகளின் அடிப்படை பதிவாக, இலங்கையில் சட்டத்தரணியாவதற்கான வழிகள் எனும் தலைப்பில் தெளிவுபடுத்தப்படுகின்றது. எந்தவயதில் உள்ளோரும் சட்டம் படிக்ககூடிய சாத்தியக்கூறுகள் இருப்பது இத்துறையின் கூடுதல் சிறப்பாகும்.

1.சட்டத்தரணிக்கு நீதிமன்றத்தில் மட்டுமா வேலை உண்டு ?
சட்ட கற்கையை பூர்த்தி செய்தவர் பின்வரும் தொழில் வாய்ப்புகளை பெறலாம்.

A . நீதிமன்றத்தில் வழக்காடுதல்

B. அரச அல்லது வங்கி போன்ற தனியார் நிறுவனங்களில் சட்டஉத்தியோகத்தர்

C. உறுதி எழுதுதல்

D. கம்பெனி செயலாளராக செயற்படல்

E. நீதிசேவைக்குள் உள்வாங்கப்படல் (நீதிபதி )

F . கல்வி நிறுவனங்களில் விரிவுரைகள் நடாத்துதல்

2. சட்ட வாண்மை (Legal Profession ) பற்றிய பிழையான கருத்துக்கள்
சட்ட கல்வியை பெறுவதற்கு அதிகளவான பெறுபேறுகள் உயர்தரத்தில் பெறவேண்டும் என பலர் தவறாக நினைக்கின்றனர். ஆனால் உயர்தரத்தில் 3 பாடங்கள் சித்தியடைந்தாலே சட்டக்கல்விக்கு விண்ணப்பிக்கமுடியும்.

சட்டத்தரணியாவதற்கு சிறந்த பேச்சாற்றல் இருக்கவேண்டும் என இன்னுமொரு தவறான கருது மக்கள் மத்தியில் உள்ளது. உண்மையில் நீதிமன்றில் வழக்காடல் செய்பவர்களுக்கே இது முக்கியமானதாகும். நீதிமன்றத்துடன் சம்பந்தப்படாத மேலே பட்டியலிப்பட்ட சட்டத்தொழிலை தெரிவுசெய்பவர்களுக்கு இது முக்கிய நிபந்தனையல்ல.

சட்டம் கற்பதற்கு அதிகளவான பணம் செலவாகும் என பலர் நினைப்பதால் அதனை கற்க முன்வருவதில்லை. ஆனால் கட்டணம் குறைந்த சட்டம் கற்கும் வழிமுறைகள் இலங்கையில் காணப்படுகின்றன.

3. இலங்கையில் சட்டம் கற்பதற்கான வழிகள்
இலங்கையில் சட்டக்கல்வியை பெற பல்வேறு பாதைகள் உள்ளன. எதுஎவ்வாறாயினும் இறுதி இலக்கு சட்டத்தரணியாவதாவே இருக்கும். இலங்கை சட்டக்கல்லூரி, அரச பல்கலைக்கழகங்கள், வெளிநாட்டு பல்கலைக்கழகங்களின் சட்ட இளமாணி கற்கைகளை வழங்கும் உள்ளூர் கல்வி நிறுவனங்கள் போன்றவற்றில் கற்கமுடியும். அவை ஒவ்வொன்றாக கீழே தரப்படுகின்றன. இவற்றுள் உங்களுக்கு பொருத்தமான பாதையை நீங்கள் தெரிவு செய்யலாம்.

4.இலங்கை சட்ட கல்லூரிக்குள் நுழைவது எப்படி?
ஒவ்வொரு வருடமும் ஆவணி/புரட்டாதி மாதமளவில் இலங்கை சட்டக்கல்லூரியால் நுழைவு பரீட்சை நடாத்தப்படும். விண்ணப்பித்தற்கான ஆகக்குறைந்த தகைமையாக உயர் தரத்தில் 3 படங்களில் சாதாரண சித்தியும்(S) சாதாரண தரத்தில் ஆங்கிலம், தமிழ்/சிங்கள பாடங்களில் C தர சித்தி பெற்றிருக்கவேண்டும். தகைமை தொடர்பான மேலதிக விடடஙகள இலங்கை சட்டக்கல்லூரி இணையத்தளத்தில் பெறலாம்.கிட்டதட்ட 250 பேர் இப்பரிட்சை மூலம் உள்வாங்கப்படுவர். கடந்தவருடத்தில் (2019) தமிழ் மூலம் பரிட்சை எழுதிய பலர் வழமையை விட அதிகமாக தெரிவு செய்யப்பட்டனர்.

இப்பரீட்சையில் 2 வினாத்தாள்கள் இடம்பெறும். இவற்றுள் முதலாவது பொது அறிவும் பொது நுண்ணறிவும், மற்றயது மொழி அறிவும் ஆகும். பொது அறிவும் பொது நுண்ணறிவும் வினாத்தாளை ஆங்கிலத்தில் எழுதினால், மொழி அறிவு வினாத்தாள் சிங்களம் அல்லது தமிழில் எழுதப்பட வேண்டும். பொது அறிவும் பொது நுண்ணறிவும் வினாத்தாளை சிங்களம் அல்லது தமிழில் எழுதினால், மொழி அறிவு வினாத்தாள் ஆங்கிலத்தில் எழுதப்பட வேண்டும்.

நுழைவுபரீட்சையில் தெரிவு செய்யப்பட மாணவர்கள் 3 வருட கற்பித்தலுக்கு உட்படுத்தப்படுவர். ஒவ்வொருவருட இறுதியிலும் ஆண்டு பரீட்சை இடம்பெறும். இறுதியில் சகல பரீட்சைகளிலும் சித்திபெறுமிடத்து (பயிற்சியின் பின்னர் ) சட்டத்தரணியாக (Attorney -at Law ) உயர் நீதிமன்றத்தில் சத்தியப்பிரமாணம்(Oath) செய்துகொள்ளலாம். இதில் கவனிக்கவேண்டிய முக்கிய விடயம் சட்டக்கல்லூரி சட்டமானி பட்டத்தை வழங்குவதில்லை.

5. இலங்கை திறந்த பல்கலைக்கழக சட்ட இளமானி பட்டம்
ஒவ்வொரு வருடமும் மாசி/பங்குனி மாதமளவில் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தால் நுழைவு பரீட்சை நடாத்தப்படும். விண்ணப்பித்தற்கான ஆகக்குறைந்த தகைமையாக உயர் தரத்தில் 3 படங்களில் சாதாரண சித்தியும்(S) போதுமானது. Attorney -at Law தகைமை பெற்றவர்கள் நுழைவுபரீட்சை இல்லாமல் கற்கமுடியும்.

பொது அறிவு, நுண்ணறிவு, மற்றும் மொழிஅறிவை சோதிக்கும்விதமாக பரிட்சை இடம்பெறும். இக்கற்கைநெறி 4 வருடங்களைக்கொண்டது. வருடாந்த கட்டணமாக ரூபா. 40000 வரை செலுத்தப்படவேண்டும். கிட்டத்தட்ட 600 பேர் வரையில் வருடாந்தம் தெரிவுசெய்யப்படுகின்றனர். இந்த வருடத்துக்குரிய(2020) நுழைவு பரீட்சை விண்ணப்பம் இன்னமும் கோரப்படவில்லை. இந்தவருடம் சித்திரை மாதத்தில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பான மேலதிக விடயங்களை இலங்கை திறந்த பல்கலைக்கழக இணையத்தளத்தில் பெறலாம்.

6. உயர்தர பெறுபேறுகளினடிப்படையில் அரச பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படல்
சட்டமானி பட்டத்தை பெற்றபின் இல

Report Page