Ka

Ka


காஞ்சிபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு சிறப்பாக ஆண்டுவந்த பல்லவ மன்னன் அபராஜித வர்மன் (கிபி 870-890), ஒரு ரகசிய ஓலையை அந்நாட்டு ஒற்றனும் சிறந்த குதிரை வீரனுமாகிய இருபத்துநான்கு வயது காண்டீபனிடம் கொடுத்து, அதை பூம்புகாரைத் தலைமையிடமாகக் கொண்டு ஆண்டுவரும் சோழ மன்னன் ஆதித்த சோழனிடம் (கிபி 871-907) ரகசியமாக கொடுத்து வரச்சொன்னான்.


ரகசிய ஓலை என்பதால் அதை இரவில் ஒரு கருப்பு குதிரையில் கொண்டு சொல்வது வசதியானது என்று அக்காலத்தில் கருதப்பட்டது.


காண்டீபன் புரவியில் ஆரோகணித்தபோது இரவு மணி பத்து. அப்போது வானம் கரிய மேகங்களின் திரட்சியுடன் இருண்டிருந்தது. கானகத்தினூடே பாதி வழி தாண்டிச் சென்று கொண்டிருந்தபோது மழை வானத்தைப் பிய்த்துக்கொண்டு கொட்டியது. மின்னலும் இடியும் தொடர்ந்து பயமுறுத்தியது.


இந்தக் கொட்டும் மழையில் மேற்கொண்டு தன்னால் புரவியில் தொடர்ந்து செல்ல முடியாது என்பதை உணர்ந்த காண்டீபன், புரவியை தூரத்தில் காணப்பட்ட ஒரு குடிசையை நோக்கி மெதுவாகச் செலுத்தினான்.


அங்கு சென்றதும், புரவியிலிருந்து இறங்கி, குடிசையின் கதவை மெல்லத் தட்டினான். உள்ளிருந்து ஒரு பெண்ணின் மெல்லிய முனகல் ஒலி மட்டும் கேட்டது. காண்டீபன் தயக்கத்துடன் கதவைத் தள்ள அது திறந்து கொண்டது. உள்ளே சென்றான். ஒரு காடா விளக்கு எரிந்து கொண்டிருந்தது. அதனருகே ஒரு கயிற்றுக்கட்டிலில் நாற்பத்தைந்து வயது மதிக்கத்தக்க ஒருத்தி படுத்தபடி முனகிக் கொண்டிருந்தாள்.


காண்டீபன் தன் கையுறைகளைக் கழட்டிவிட்டு, வலது கையினால் அவள் கழுத்தை தொட்டுப் பார்த்தான். உடம்பு கொதித்தது. ஜுரத்தில் உடம்பு அடிக்கடி தூக்கிப் போட்டது.


அவள் கையை நீட்டிக் காண்பித்த திசையில் உற்றுப் பார்த்தபோது அங்கு குமிட்டி அடுப்பு ஒன்று இருந்தது. அடுப்பினருகே தரையில் தூதுவாளைச் செடிபோல் இலைகளுடன் ஏதோ ஒன்று பறித்து வைக்கப் பட்டிருந்தது.


காண்டீபன் புரிந்துகொண்டு அந்த இலைகளில் வெந்நீர் போட்டு அதை அவளுக்கு அருந்தக் கொடுத்தான். அப்போது மழையும் முற்றிலுமாக நின்றுவிட்டது. அதைக் குடித்த பத்து நிமிடங்களில் அவளுக்கு உடல் ஏராளமாக வியர்த்தது. உடனே அவள் ஜுரம் பறந்துவிட்டது.


அடுத்த கணம் அவள் கட்டிலிலிருந்து துள்ளி எழுந்தாள்.


காண்டீபனின் கைகளைப் பற்றி வாஞ்சையுடன், “என் உயிரைக் காப்பாற்றிய நீ யார்? நீ சிறிது தாமதமாக வந்திருந்தாலும் நான் இறந்திருப்பேன். மழையில் நனைந்தால் நான் இறந்து விடுவேன் என்பது எனக்கு இடப்பட்ட சாபம். அது எனக்குத் தெரியும் என்பதால் மழை ஆரம்பித்தவுடன் குடிசைக்கு ஓடோடி வந்தேன். ஆனால் அதற்குள் முற்றிலுமாக நனைந்து நான் இறப்பதற்கு முன்னோடியாக காய்ச்சலில் வீழ்ந்தேன். நீ வந்து என்னைக் காப்பாற்றி விட்டாய்.”


“எ…என்னது சாபமா?”


“ஆமாம் அது ஒரு பெரிய கதை. அதை பிறகு சொல்கிறேன். நான் இப்போதைக்கு ஒரு சூனியக்காரி. ஆனால் என் சூனியத்தால் நல்லவைகள்தான் நடக்கும்.”


காண்டீபன் முற்றிலுமாக அதிர்ந்தான். திகைத்து நின்றான்.


“என் உயிரைக் காப்பற்றியவன் நீ. உனக்கு என்ன வரம் வேண்டுமென்று கேள். அதை என்னால் நிறைவேற்ற முடியும்.”


“நான் மிகவும் ஏழை. பல்லவ நாட்டின் ஒரு சாதாரண ஒற்றன் நான். என் அப்பா ஒரு போரில் இறந்துவிட்டார். அம்மாவும் மூன்று சகோதரிகளும் என்னுடன் உள்ளனர். எனக்கு சொந்தமாக ஒரு வீடு வேண்டும். பிறகு என் சகோதரிகளுக்கு சிறப்பாக கல்யாணம் செய்து கொடுக்க வேண்டும். இவைகள் அனைத்தும் உன்னால் நடந்தால் என் வாழ்நாள் முழுவதும் உனக்கு அடிமையாக நான் சேவை செய்கிறேன்.”


“உன் ஆசைகள் அனைத்தையும் என்னால் அடுத்த மூன்று மாதத்தில் நிறைவேற்றி வைக்க முடியும். எனக்கு இன்னமும் திருமணம் நடக்கவில்லையே என்கிற ஏக்கம் எனக்குள் அதிகம். உன் ஆசைகள் என்னால் படிப்படியாக முற்றிலும் நிறைவேறியதும், அதற்கு கைமாறாக என்னை நீ திருமணம் செய்து கொள்ள வேண்டும். செய்து கொள்வாயா? யோசித்து பதில் சொல்….ஆனால் சொன்னசொல் மாறக்கூடாது.”


காண்டீபன் உடனே அவள் கையைப் பற்றிக்கொண்டு “என் ஆசைகள் நிறைவேறினால், உன்னை கண்டிப்பாக திருமணம் செய்து கொள்வேன். இது சத்தியம்” என்றான்.


அவள் கண்டீபனை ஆசையுடன் அணைத்துக்கொண்டு, ”யம்மாடி இம்மாதிரி ஒரு வீரனின் தினவெடுத்த தோள்களில் சாய்ந்து கொள்ள இத்தனைநாள் நான் ஏங்கியது வீணாகவில்லை” என்றாள்.


மறுநாள் சூரியன் உதித்ததும், காண்டீபன் விடைபெற்று புரவியில் கிளம்பிச் சென்றான். காலை வெயிலின் இதத்தில் வெளியே நின்று கொண்டிருந்த அந்த ஆறு அடி உயரக் குதிரையின்மீது காண்டீபன் வெகு அலட்சியமாக துள்ளி ஏறி அமர்ந்த கம்பீரத்தை, கண்களில் காதல் மின்ன அவள் ஆசையுடன் பார்த்தாள்.


பூம்புகாரில் காண்டீபன் தந்த ஓலையைப் படித்த மன்னன் ஆதித்த சோழன், அதில் இருந்த செய்தியினால் சந்தோஷத்தில் துள்ளினான். செய்தி கொண்டுவந்த காண்டீபனுக்கு மரியாதை செய்தான். அந்த மரியாதையின் ஒரு பகுதியாக அவனுக்கு ஒரு பெரிய வீடு பரி

Report Page