A/L

A/L

சமூகம் சீரழிவு அல்லது கலாச்சார சீர்கேடா இரவு நேர வகுப்புகளை தடை செய்ய வேண்டும் என்ற போராட்டத்தின் பின்னனி அல்லது மாணவர்கள் கல்வி…


இரவு நேர வகுப்புக்கள் தடை செய்யப்பட வேண்டும் என்பது நியாயமான விடயம் தான் ஆனால் இங்கே முன் வைக்கப்படும் காரணம் தான் என்ன?


கலாச்சார சீர்கேடா? 

அல்லது

கல்வி பாதிப்படைகின்றமையா?


உயர் தரம் என்பது என்ன? அதிலும் கணித விஞ்ஞான பிரிவு என்பது என்ன ? எவ்வளவு தியாகம் போராட்டம் தேவை என்பது நாம் அனைவரும் அறிந்ததே!


முன்னோர் காலம் இருந்தது கல்முனை கு ஏறி இறங்கியது இப்போது அது இல்லை எம்மருகிலயே பல டியூசன்கள் வந்து விட்டன. எமதூர்களில் முன்னரும் டியூசன்கள் இருந்தன இல்லை என்பதற்கில்லை! 

ஆனால் மாவட்ட கோட்டாவை அனுப்பிவிட்டு மார்தட்டினோம்.! ஒன்று இரண்டு விதிவிலக்கு.

இப்போது ஒன்று இரண்டாவது மாவட்ட கோட்டாவில் அல்லாமல் மெரிட் இல் செல்கின்றனர்.


சரி அது ஒரு புரம் இருக்கட்டும். பாடசாலைகளில் 5-6 மணி நேரங்கள் வீண்டிக்கப்படுவதைப் பற்றி யாரும் கரிசனை காட்டவில்லை. Physics Chemistry போன்ற பாடங்களில் இருக்கும் Practical கள் செய்யப்படாமல் முழுப் பூசனிக்காயாய் மறைக்கப்பட்ட போது இங்கு யாரும் அதை எதிர்த்து டிசைன் டீபி போடவில்லை. "அலகுகளும் பரிமாணங்களும் " எனும் அலகு 3 மாதகங்களுக்கு அதிகமாக கற்பிக்கப்பட்டு மெகானிக்ஸ் எனும் பரப்பு கூடிய முக்கியமான , வினாத்தாளில் 25% அதிகமான கேள்விகள் வரும் அலகு ஒன்றரை மாதத்தில் முடக்கப்பட்டு இருட்டடிப்பு செய்யப்படும் போது எவரும் சீர்திருத்த வரவில்லை. Statistics போன்ற கணிதத்தின் இறுதி அலகுகளும் சரி, பிசிக்ஸ் கெமிஸ்ட்ரி போன்றவற்றின் இறுதி அலகுகளும் சரி படித்துக் கொடுக்கப்படாமல் விடப்பட்ட போது யாரும் அத கண்டு கொள்ளவில்லை.


இவ்வாறு இருக்கின்றதா என்பது கூட இப்போது கொடி பிடிக்க தொடங்கியிருப்போர்களிற்கு தெரியுமா? தெரியாதா என்பது கூட தெரியாது.

எமதூரில் , எமது மாவட்டத்தில் தமிழ் மொழி மூல ஏ எல் இல் இவ்வாறு ஏராளமான குறைபாடுகளுடனேயே கற்பித்தல் செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுகன்றன. சமூக நலன் மீது ஆவல் ஆர்வம் இருப்பவர்கள் ஆய்வு செய்து இவ்விடையங்களை தட்டி கேட்டிருக்கலாம் தானே? பாடசாலை நிர்வாகங்களின் காலர்களை பிடித்து கல்வி தொடர்பாக கேள்வி கேட்டிருக்கலாம் தானே! 

சொல்லப்போனால் இங்கே பட்டியல் நீண்டு கொண்டே செல்லும் அந்தளவிற்கு குறைபாடுகள் உள்ளன.

ஓர் மாணவன் எடுக்கும் 3A Result இல் இந்த பாடசாலைகளின் பங்குதான் என்ன? Project உம் Attendance உமா? அதை எல்லாம் தட்டி கேற்க மாட்டீர்களா?


உயிரியல் னு ஒரு பாடம் . டாக்டர் ஆகனும்னா இதுல A எடுத்து தான் ஆகனும். இந்த பாடம் அடிக்கடி update ஆகும் . Update ஆக ஆக நோட்ஸ் உம் மாறும். இங்கே அடிக்கடி Update ஆகும் ஆசிரியர்கள் காட்டுங்கள் பார்ப்போம். ( நல்ல சிறந்த கற்பித்தலில் பற்று உள்ள ஆசிரியர்களிற்கு இது பொருந்தாது)


இவ்வாறு உயர்தர கற்பித்தலில் எமதூரில் ஏகப்பட்ட ஓட்டைகள் உள்ளன.

இதுகளை தான் முதலில் மாற்ற வேண்டும் . கல்வியின் அடிப்படையை திருத்தாமல் எவ்வாறு உயர் பெருபேறுகளை எதிர்பார்க்க முடியும்.


மெரிட் இல் பாஸ் ஆகி மொரட்டுவ , கொழும்பு பல்கலை செல்ல வேண்டிய எத்தனையோ திறமையுள்ள மாணவர்களை இந்த பாலாப்போன எமதூரின் கற்பித்தல் முறை மூலம் சவுத் ஈஸ்டர்ன் இற்கும் பெட்டி மெடிகல் இற்கும் அனுப்பி கொண்டிருக்கின்றது. இதில் பெருமைகள் மார்தட்டல்கள் வேறு...


இங்க 3F எடுத்தவன் யாழ் சென்று 3S / 3C எடுக்கின்றான் என்றால் தவறு யார் மீது??? உணருமா இந்த சமூக சீர்திருத்த கும்பல்?

இவ்வாறான தவறுகள் குறைகளை இயன்றவரை குறைத்து கொண்டு ஒரு டியூசன் ஆரம்பிக்கப்பட்டால் அதை மூட முந்திக் கொண்டு வந்து விடுகிறோம்.


அடுத்து கலாச்சார சீர்கேடு! 

ஏனுங்க மக்களே அக்கரையூர், அட்டாளைச்சேனை போன்ற எமதூர்களில் இரவு நேர வகுப்பக்கள் வந்த பிற்பாடு தான் இந்த கலாச்சாரம் சீர் குழைந்ததா? போதைக்கு அடிமையாக ஒரு கூட்டம் தத்தளிக்கின்றது , காதல் என்ற பேரில் பெண்கள் சீரழிகின்றனர். இவை எல்லாம் இரவு நேர வகுப்புகள் வந்த பிற்பாடு தானா? ஒரு 5 வருடம் இருக்குமா? இந்த இரவு நேர வகுப்புகள் அறிமுகமாகி? அந்த போதைப்பொருள் காரணமாக சீரழிந்த இளைஞர்கள் உங்களிற்கு கலாச்சார சீர்கேடுகளாக தென்படவில்லையா? அல்லது அவற்றை எதிர்த்து போராட நீங்கள் திராணி அற்றவர்களா?


பெருநாள் காலங்களில் வீதிகளில் வாகனங்களில் மீது வெடில் கொழுத்தி வீசி போலிஸ் விரட்டிய போது இளைஞர்களின் கலாச்சார சீர் கேடுகள் தொடர்பில் யாரும் ஏன் வினவில்லை?


பாடசாலை பாத்ரூமில் சிகரட் , சரக்கு பாட்டில்களை கண்டெடுத்த போது ஏன் சமூக சீர் திருத்த வாதிகள் சீற வில்லை?


இவ்வாறு எத்தனையோ சீர் கேடுகள் இடம்பெற்றிருந்தாலும் அவற்றை பொருற்படுத்தாது இப்போது ஏன் இரவு நேர வகுப்புகளில் உங்கள் பார்வை விழுந்திருக்கின்றது. இதில் இருக்கும் பால்டிக்ஸ் தான் என்ன?


இரவு பதினொரு மணி வரை வகுப்பை நடாத்தும் நிர்வாகம் அங்கே 


கற்கும் பெண் மாணவர்கள் தொடர்பில் கவனம் செலுத்தாமல் இல்லை. 


இரவு நேர வகுப்புகள் நிறுத்தப்படல் வேண்டும். ஆனால் அவை வேணும் என்று நடாத்தப்படவில்லை. அவற்றின் பின் பிரச்சினைகள் ஏராளம். அவற்றிற்கு தீர்வுகள் இருப்பின் நன்கு ஆராய்ந்த பின் உரியவர்களிடம் கூறி தீர்வைக் காணுங்கள்.

அதைவிடுத்து சமூக சீரழிவு கலாச்சார சீரழிவு , என்ற கதை விடாதீர்கள்.


நீங்கள் செய்யும் பில்ட் அப்கள் ஏதோ கற்பழிப்பு நடப்பது போல் காட்சியளிக்கின்றன.


"இன்னுமோர் வித்தியாவை தவிர்ப்போம்" 


அடேய்களா!!!


😈😈😈😈


On this day 😂😂😂 சம்பவம்!

எவ்ளோ பெரிய கோவக்காரணா இருந்திருக்கம்

Report Page