*/

*/

From

தக்காளி சாகுபடி செய்யும் விவசாயிகள் கவனத்திற்கு

தக்காளி நாற்று போட்டு 30 ஆம் நாள் நாற்றை எடுத்து வந்து விதை நேர்த்தி செய்யனும். 200 கிராம் அசோஸ்பைரில்லம் 200 கிராம் பாஸ்போபாக்டீரியா, வேம் 200கிராம் மூன்றையும் கலந்து வேரை நன்கு ½ மணி நேரம்; வரை நனைத்து நட வேண்டும்.

இதனுடன் சாணிப்பால் சேர்த்துக் கொள்வது நல்லது. வரிசைக்கு வரிசை 5 அடியும் செடிக்குசெடி 2 அடியும் இடைவெளி விட்டு நடவு செய்ய வேண்டும்.

நடவு செய்து திரும்பவும் 20 நாட்கள் கழித்து வயலின் ஆரம்ப முதல் வயல் முடியும் வரை வரிசைக்கு வரிசை இரண்டு ஓரத்திலும் சவுக்கு குச்சிகளை நடவு செய்து அவற்றில் படத்தில் உள்ளவாறு கம்பிகளை கட்டிவிட வேண்டும்.

பிறகு ஒவ்வொரு செடியில் அடியிலையில் கயிறுகளை கொண்டு கட்டி கம்பியில் தூக்கி கட்டி விடவும் இவ்வாறு செய்தால் தக்காளி பழம் அழுகாது, வெப்பம் தாக்காது, மழை பெய்தால் கூட பழம் கெடாமல் இருக்கும். மகசூல் கூடும் .

உயிர் உரம்
2 கிலோ அசோஸ்பைரில்லம், 2 கிலோ பாஸ்போபாக்டீரியா, 2 கிலோ வேம்,50 கிலோ ஆறிய மக்கிய தொழு எருவுடன் 1;கிலோ டிரைக்கோடெர்மாவிரிடியையும் கலந்து ஒரு ஏக்கர் பயிருக்கு இட்டு நீர் பாய்ச்ச வேண்டும்.

நுண்ணுரம்
5 கிலோ காய்கறி நுண்ணுரத்தை 20 கிலோ மணலுடன் கலந்து நட்ட ஒரு வாரத்திற்குள் தூவ வேண்டும்.வளர்ச்சிஊக்கிகள்பயிர் நடவில் இருந்து 35ம் நாள், 50ம் நாள் மாலை வேளையில்வளர்ச்சி ஊக்கி ஏதாவது ஒன்றை தெளித்து மகசூலை அதிகரிக்கலாம்.

செடி வளர்ச்சி சுமாராக இருந்தால் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 10 கிராம்என்ற அளவில் 19 : 19 : 19 கரையும் உரம் தெளித்து செடி வளர்ச்சியை அதிகப்படுத்தலாம்.

செடியின் வளர்ச்சி அதிகமாக இருந்தால் மல்டிகே ஒரு லிட்டர்தண்ணீருக்கு 10 கிராம் தெளித்து செடியின் வளர்ச்சியை கட்டுப்படுத்திமகசூலை அதிகப்படுத்தலாம்

மேலும் தகவல் பெற RSGA வை அனுகலாம் தொடர்புக்கு

9952305745

Report Page