*/

*/

From

ஒட்டுண்ணிகளால் உருவாகும் இரத்தச் சிறுநீர் நோய் மற்றும் தவிர்க்கும் முறைகள்

மாடு உடலில் உணிகள் இருப்பதை பார்த்து இருப்பீர்கள். குறிப்பாக காட்டில் தன்னிச்சையாக மேயும் கால்நடைகளில் இந்த பிரச்சினை இருக்கும். மேலும் பட்டி ஆடுகள் மீது உணி இருந்தாலும் நாய்கள் மீது இருந்தாலும் மாறி மாறி தொற்றிக்கொள்ள வாய்ப்பு உள்ளது.

கிராமங்களில் காட்டுப்பகுதிகளுக்கருகில் மேயும் கால்நடைகளுக்கு இந்த உணித்தொல்லை அதிகமாகவே இருக்கும். இந்த உணிகளால் இரத்தச்சிறுநீர்; அடிக்கடி காய்ச்சல்; மஞ்சல் காமாலை; இருதய மற்றும் சிறுநீரக பாதிப்பு ஏற்படும். காரணம் இந்த உணிகள் மூலம் பரவும் இரத்த புரோட்டோசோவா என்ற நுண் கிருமிகள். மேலும் இந்த கிருமிகள் இரத்த சிவப்பணுக்களை மெல்ல மெல்ல சிதைத்து தீவிர இரத்தசோகையை ஏற்படுத்திவிடுகின்றன. இந்த உணிகளை கட்டுப்படுத்தவேண்டியது தற்காலத்தில் மிக்க அவசியம். ஏனெனில் இதனால் பால் உற்பத்தி குறைந்து மாடு இருதயம் கடுமையாக பாதிக்கப்பட்டு இறக்கும் நிலைக்கு தள்ளப்படும். மாடு காப்பி நிறத்திலோ இரத்தமாகவோ கருமைகலந்த இரத்தமாகவோ சிறுநீர் கழித்தால் பார்த்தவுடன் கால்நடைமருத்துவரை அழைத்து சிகிச்சை அளிக்கவேண்டும். மேலும் விடாமல் 102'க்குமேல் இரண்டுநாட்களுக்குமேல் காய்ச்சல் இருந்தாலும் உணிக்காய்ச்சலாக இருக்கும். மருத்துவ சிகிச்சை கண்டிப்பாக செய்ய வேண்டும் . கூட கீழ்க்கண்ட நம் மூலிகை கலவையை தயாரித்து பத்து நாட்களூக்கு கொடுங்கள். ராகி கூழ் அவசியம். எளிதில் சீரணமாகக்கூடிய பச்சை தீவனம் கொடுங்கள். அப்போது தான் சாணிபோட ஏதுவாக இருக்கும். இந்த நோய் பாதிக்கப்பட்ட மாடுகளில் ஆசனவாய் கடுமையாக பாதிக்கப்பட்டு சாணி ""வெளியேறமுடியாமல் காணப்படும்.

பாரம்பரிய மூலிகை மருத்துவம் :

கீழாநெல்லி ஒரு கைப்பிடி; துளசி இலை200கிராம்; திருநீற்றுப் பச்சிலை செடி இலை சிறிது; சீரகம்50கி; மிளகு 10கி; சிறியாநங்கை செடி இலை ஒரு கைப்பிடி இவற்றை நன்கு உரலில் மைய அரைத்து பனை வெல்லத்தில் கலந்து உள்ளே கொடுங்கள். ஒருநாளைக்கு ஒருமுறை கொடுத்தால் போதும்."" மாடு இரத்தம் தெளிந்து பழைய நிலைக்கு வந்துவிடும். அனுபவ சிகிச்சை.

கால்நடை மருத்துவர் . மணி கணேஷ் . அம்மா அவசர சிகிச்சைப் பிரிவு. சேலம் மாவட்டம்

Report Page