*/

*/

From

நட்டு வெச்சா போதும்..! பராமரிப்பு இல்லாமலேயே பணம்! மானாவரி நிலங்களில் மழை காலத்தில் வளர்க்க ஏற்ற மரம் பீநாரி என்ற பெருமரம்.

தீக்குச்சி தயாரிப்பில் மூலப்பொருளாக இருப்பதால் இதை தீக்குச்சி மரம் எனவும் அழைக்கிறார்கள். மழை காலங்களில் நடவு செய்தால், தானாக வளர்ந்து நான்கு ஆண்டுகளில் பயன்தரும். மழை இல்லாத காலங்களில் நடவு செய்தால் மூன்று மாதம் வரை 10 நாட்களுக்கு ஒரு முறை 20 லிட்டர் தண்ணீர் (ஒரு குடம்) கொடுக்க வேண்டும். இதன் இலைகளை கால்நடைகள் கடிக்காது. 15 அடி இடைவெளியில் நடவு செய்யலாம். மாதம் ஒரு தண்ணீர் கொடுத்தால் வாழையைப் போல் அதி வேகமாக வளரும்..

இதை வேலி ஓரங்களிலும் நடவு செய்யலாம். ஏக்கருக்கு 200 மரங்கள் வரை வைக்கலாம். நான்கு ஆண்டு முடிவில் வளர்ச்சியைப் பொருத்து ஒரு மரம் 5 ஆயிரம் வரை விலை போகும்.

Jul 16, 2015 · Public · in

Report Page