🙂🙂

🙂🙂


இரவு 12 


ஆக பத்து நிமிடம் இருக்கும் போது மனைவியின் கைப்பையை உருட்டினேன்.


தூக்க கலக்கத்தில் மனைவி என்ன என்றார்


”இல்ல சாவி”


“எந்த சாவி”


“ச்சோ நீ தூங்கிட்டே பேசாத”


“நம்ம வீட்டு சாவியா”


“ஆமா”


”அதுக்கென்ன”


“கேட்டு பத்து மணிக்கு மேலத்தான் பூட்டினேன். பூட்டின பிறகு இப்போ தூங்கப் போகும் போது கதவ பூட்ட சாவியத்தேடினா காணல”


“வீட்டுக்குள்ளதான இருக்கு. தூங்குங்க. காலைல பாத்துக்கலாம்”


“நீ இப்படிதான் சொல்லுவ. நா பாத்துகிறேன். நீ தூங்கு”


தேடினேன். 


கேட்டு பூட்டும் போது சைக்கிள எடுத்து உள்ள வைக்க நினைச்சோம். அப்போ சைக்கிள் பூட்டு திறக்கல. அத குனிஞ்சி குனிஞ்சு திறந்தோம். அப்போ கீழ விழுந்திருக்குமோ. நள்ளிரவு கதவைத் திறந்து சைக்கிள் வைத்த இடத்தில் தேடினேன். 


தேடும் போது நினைவு வந்தது.


“ஆங் சைக்கிள் எடுக்கும் போது கால்ல ஏதோ ஒட்டிச்சின்னு பாத்ரூம்ல கழுவப் போனோம். அப்போ பாத்ரூம்ல விழுந்துட்டா. போய் பாத்ரூமில் தேடினேன்”


சும்மானாலும் கிச்சனுக்கு சென்று அங்குள்ள செல்பில் இருக்கும் பொரிகடலை டப்பாவை திறந்து நான்கு பொரிகடலை எடுத்து சாப்பிடுவேன். அங்க போட்டேனா. கிச்சன் டப்பாக்கள் அனைத்தும் உருட்டப்பட்டன.


நடு நடுவே இரண்டு கைகளையும் மண்டைக்குள் விட்டு ரா ரா ரா என்று ராவிக் கொண்டேன்.


எனக்கே என்னை பிடிக்கவில்லை. என்ன மனிதன் நான். எதிலும் தெளிவில்லை. கவனமில்லை. ஏதோ ஒன்றை நினைத்துக் கொண்டு. யார் என்ன சொன்னாலும் நினைவில் வைக்காமல். சிறு சிறு விஷயங்களில் கவனம் கொள்ளாமல். சாவியை எங்கே வைத்தேன்.


ஒருவேளை மகள் எடுத்திருப்பாளோ. டிவிக்கு அடியில் விழுந்திருக்குமோ. நின்று கொண்டே பார்த்தால் தெரியாது.


இப்போது சிறு குழந்தை மாதிரி ஹால் முழுக்க தவிழ்ந்தேன். இங்கும் அங்கும் தவிழ்ந்தேன். புத்தக செல்பின் கீழே பார்த்தேன். இல்லை. 


சாவி எங்கே சாவி எங்கே சாவி எங்கே


ஒத்தா சாவி கூதிய எங்க போட்டு தொலைச்சேனோ.நைட்டு வந்து சூத்தடிக்குது இந்த சாவி என்று ஒங்கி தரையை மிதித்துக் கொண்டேன்.


தேடி தேடி டயர்ட் ஆனேன்.


சரி தூங்குவோம். காலையில் ப்ரஷ்சாக யோசித்தால் கிடைக்கும் என்று தோன்றியது. உடம்பும் மனசும் டயர்ட் ஆகியது.


போய் படுத்தேன்.


சாவி தொலைந்து விட்டது என்று நினைத்தே படுத்தேன். மூன்று மணி வரை ஒரளவு தூங்கினேன்.


மூணு மூணே காலுக்கு சிறுநீர் வந்து விட்டது. எழுந்து சிறுநீர் கழிக்கும் போது “ஒருவேளை கக்கூஸுக்குள் விழுந்திருக்குமோ” என்று நினைத்தேன். கக்கூஸுக்குள் எட்டி எட்டி பார்த்தேன்.


“சரி தூங்குவோம் தூக்கம் கலைந்து விடப் போகிறது” என்று வந்து படுக்கையில் படுத்தேன்.


புரண்டு புரண்டு படுத்தேன். தூக்கமே வரவில்லை.


சுய இன்பம் செய்தால் தூக்கம் வரலாம் என்று தோன்றியது. சில சமயம் இப்படி மூணு மணிக்கு தூக்கம் வரவில்லை என்றால் சுய இன்பம் செய்தால் தூக்கம் வரும். 


அப்போது பெரிய செக்ஸ் ஆர்வம் எல்லாம் இருக்காது. நானே என் மனதை தூண்டிவிட்டு சுய இன்பம் செய்ய வேண்டும். எதாவது ஒரு காட்சி சிறுவயதில் என்னை கிளர்த்திய காட்சியை ரீகால் செய்து கொஞ்சம் எழுச்சியை உண்டு பண்ணி சுய இன்பம் செய்ய வேண்டும். 


இப்படி செய்யும் போது விந்து வெளியே வந்தால் போலவே இருக்காது. ஒரு மாதிரி லேசாக கிளுகிளு என்று இருக்கும். இருந்தாலும் கொஞ்சம் ரிலாக்ஸாக இருக்கும்.


சுய இன்பம் செய்யலாமா இப்போது. 


பக்கத்தில் குடும்பம் பார்க்கும் போது தயக்கமாய் இருந்தது. மேலும் சுய இன்பம் செய்யும் போதே சாவி நினைவு வந்து விட்டால் என்ன செய்வது என்ற தயக்கமும் இருந்தது.


வேண்டாம் இப்படியே தூங்குவோம். தூக்கமே வா. தூக்கமே வந்து தொலை. சனியனே வந்து என்னை தூங்கச் செய். தயவு செய்து தூக்கமே வா.


இப்படியே புரண்டு புரண்டு ஒரு மணி நேரம் ஆகியது. எழுந்து மணி என்ன என்று பார்க்க தோன்றியது. வேண்டாம் எழுந்தால் முற்றிலுமாக எழுந்து விடுவோம்.


எப்படியோ தூங்கி முழிக்கும் போது காலை ஆறே கால் ஆகி இருந்தது.


மனைவி எழுந்து பெட்ஷீல் மடித்துக் கொண்டிருந்தார்.


கண்முழித்ததும் மனைவியிடம் “சாவி சாவி எங்கன்னே தெரியல” என்றேன்.


“பார்ப்போம்” என்று பல்விளக்க போய்விட்டார்.


நான் மறுபடி எழுந்து இரவு தேடிய அனைத்து இடங்களிலும் தேடினேன்.


மனைவி வந்து “நீங்க பல்விளக்கி பாத்ரூம் போவீங்கல்லா போங்க”


“இல்ல சாவி”


“அத யோசிப்போம். பாத்ரூமாவது போகத் தெரியுமா” 


அவமானத்துடன் போனேன்.


பல்விளக்க விளக்க மனைவி என்னை அவமானப்படுத்தி விட்டதாக அழுகை வந்தது.


மனிதனின் செயல்தான் இங்கே எல்லாம். அதை வைத்துதான் மரியாதை. என் தாத்தா தன் வாழ்க்கையை தெரு தெருவாக சீனிக்கிழங்கு விற்பதில் தொடங்கினார். பின்பு நுவரெலியா என்ற இலங்கை நகரின் மேல் இருக்கும் ஹட்டன் என்னுமிடத்தில் இருக்கும் டீ எஸ்டேட்டில் Rice Keeper ஆக கடை வைத்து நிறைய சம்பாதித்தாராம். ஆறு மாதம் இலங்கை. ஆறு மாதம் தமிழ்நாடு. கார் எல்லாம் வைத்திருந்தாராம். வாழ்க்கையில் மிக கம்பீரமாக வாழ்ந்திருக்கிறார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.


ஆனால் வயதான காலத்தில் தாத்தா வேட்டியில் ஆய் இருந்து வைத்து விட்டார் என்று அப்பாம்மை (பாட்டி) வேட்டியை அலசி வந்து அந்த எரிச்சலில் தாத்தா கையில் ஒரு அடி அடித்தார். நான் அதைப் பார்த்தேன். அப்படி அடித்ததை தப்பாக பார்க்க தோன்றவில்லை. ஏதோ ஒரு வெண்டிலேசன்தான் அது. இருந்தாலும் தாத்தாவுக்கு அது அவமானமாக நிச்சயமாக மனதில் படிந்திருக்கும்தான்.


இலங்கைக்கு போனால் என்ன? என்ன சம்பாதித்தால் என்ன? வேட்டியில் ஆய் போனால் அடிதான் கிடைக்கும்.


பேக்கு மாதிரி சாவியை காணவில்லை என்று தேடினால் மனைவி இப்படி கிண்டல் பண்ணத்தான் செய்வாள்.


பொறுத்துக்கொள். இந்த கிண்டலுக்கு நீ முழு தகுதி உடையவன். இதற்கெல்லாம் அதிகம் வேதனைப் படாதே.


பல்விளக்கி வெளியே வந்தேன்.


“எபிள பால் இருக்கா”


“இல்லையே”


“கேட்ட எப்படி திறக்கிறது. மேல்வீட்டுல கேக்கலாம்னா நல்லா தூங்கிட்டு இருப்பாங்களே. நா லெமன் டீ போடவா”


“ம்ம்ம்”


இரண்டு சிறிய டம்ளர் நீரை வைத்து டீத்தூளை கம்மியாக போட்டு, சீனி போட்டு கொதிக்க வைத்தேன் கொடு சூடு ஆறியதும். அதில் எலுமிச்சையை பிழிந்து விட்டேன். 


மனைவிக்கு ஒரு டம்ளர் நீட்டினேன்.


“இருங்க சோறு வெச்சிட்டு வரேன்”


நான் லெமன் டீயை எடுத்துக் கொண்டு வந்தேன். மனைவியும் வந்தார்.


மறுபடி சாவியை பற்றி புலம்பினேன்.


“இருங்க வரிசையா சொல்லுங்க”


நான் வரிசையாக சொல்லி அங்கெல்லாம் நான் தேடியதையும் சொன்னேன்.


கேட்டுக் கொண்டார்.


அமைதியாக இருவரும் லெமன் டீயை குடித்துக் கொண்டே இருந்தோம்.


“நேத்து பூட்டும் போது பேண்ட் போட்டிருந்தீங்களா”


“எபிள பத்து மணிக்கு லுங்கிலதான இருப்பேன்”


“இல்ல ஒன்பரைக்கு பழம் வாங்கிட்டு வரேன்னு போனீங்க. அதே பேண்டோட இருந்திருப்பீங்க. பேண்ட் பாக்கெட்ட செக் பண்ணுங்க”


நான் பரபரப்பானேன். 


“பேண்ட் ஆமா பேண்ட்ல இருக்குமோ. பேண்ட் எங்க. அழுக்கு கூடை. அழுக்கு கூடைலையா இருக்கு.”


பாய்ந்து போய் சந்தன கலர் பேண்டல் கைப்பற்றினேன். அதன் பாக்கெட்டை தொட்டுப் பார்த்தேன்.


அங்கே சாவி அழகிலும் அழகாக செல்லம் போல கிணுங்கியது.


“ஒ மை காட் என் சாவி கிடைச்சிட்டு. என் சாவி கிடைச்சிட்டு” என்று சொல்லி மனைவியை முத்தமிட வந்தேன். அவர் தள்ளிவிட வலுக்கட்டாயமாக நெற்றியில் முத்தமிட்டேன்.


“இதெல்லாம் அன்பு கிடையாது. உங்கள் அளவுல மனசுக்குள்ள இதெல்லாம் ஒரு விஷயமான்னு அலட்சியம் இருக்கும். ஐ நோ” இது மனைவி.


இப்போது என் குரல் திமிரானது.,


“ஆமா இருக்கும்தான். திமிர்தான் அதுக்கு என்ன இப்போ. எங்கம்மா சொல்லுவாங்க நீ காய்ச்சல்ல படுத்திருக்கும் போது உன் முகத்த பாத்தாலே கலங்கிரும். அவ்வளவு அப்பாவியா முகம் வாடிப் போய் இருக்குமாம். ஆனா ஒன்ஸ் காய்ச்சல் விட்டுட்டுன்னு வைச்சிக்கோ உன்ன விட திமிரா ஒருத்தனையும் பாக்க முடியாதுன்னு”


“...........”


நான் தொடர்ந்தேன் “ஆனா செல்லம் வாழ்க்கையில நீ எப்பவும் என் கூட இருக்கனும். உன்னால மட்டும்தான் என்ன ஹேண்டில் பண்ண முடியும். சரியா... என்ன கைவிட்டுராத. அப்படியே கண்ணுக்குள்ள வைச்சி பாதுகாத்துக்க சரியா”


“போதும் போரடிக்குது. ஒண்ணுமே நடக்கல. அதுக்கு எக்சைட் ஆகி. பதற்றமாகி. அப்புறம் அது சால்வ் ஆனதும் ஹேப்பியாகி. அந்த பதற்றத்துல உளறி..”


மனைவி எழுந்து சென்றார். இது எனக்கு எரிச்சலாகவே இல்லை. மாறாக மகிழ்ச்சியாக இருந்தது.


நடந்து கொண்டிருக்கும் மனைவியிடம் கேட்டேன்


“நான் போட்ட லெமன் டீ எப்படி இருந்திச்சி செல்லம்”


“நல்லா இருந்திச்சி செல்லம்” பதில் வந்தது .

Report Page